பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 130 ஆசனங்களுடன் பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

Share Button

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 130 ஆசனங்களுடன் பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெறக்கூடிய கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெறும் வாக்குகளில் பாதியையாவது பெற மாட்டாது என திரு.பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார். அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டார்.

இலங்கையில் புதிய அரசியல் யாப்பு அறிமுகம் செய்யப்படுவது அவசியமாகும். இதன்போது தேர்தல் முறை, நிறைவேற்று அதிகாரங்கள், அமைச்சர்களை நியமித்தல் போன்றவை தொடர்பான நியமங்கள் குறித்து கவனம் செலுத்தப் போவதாக திரு.பசில் ராஜபக்ஷ கூறினார்.

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் பின்னடைவை எதிர்கொள்ளும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களில் கூடுதல் பெரும்பான்மையைப் பெறலாம். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதலிடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11