திரிபிடகய இலங்கையின் தேசிய உரிமையாக பிரகடனம்

Share Button

சம்புத்த போதனைகள் அனைத்தையும் உள்ளடக்கிய திரிபிடகய இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திரிபிடகயவை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்துவதற்கும், அது தொடர்பில் மீள அச்சிடும் பணிகள் புத்தசாசன அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மாத்திரம் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திரிபிடகய இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட பழைமைவாய்ந்த எழுத்துமூலமான நூல்களில் ஒன்றாகும். 1956ஆம் ஆண்டில் இரண்டாயிரத்து 500ஆவது ஸ்ரீ சம்புத்தவ ஜயந்தி நிகழ்வின் விசேடத் திட்டமாக இதனை பாதுகாத்து முழுமையான நூலாக தயார் செய்து, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வெளியீடாக அச்சிடப்பட்டுள்ளது. இலங்கையில் தேரவாத பௌத்தம், திரிபிடகய பௌத்த கோட்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் உலகில் உள்ள மத நூல்களின் மத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *