மக்கள் மன்றத்தின் நான்காவது அமர்வு இன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்

Share Button

இலங்கை தகவல் திணைக்களமும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள பொதுமக்கள் அரச சபை என்ற நிகழ்ச்சியி;ன் நான்காவது நிகழ்வு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரகோன் கலையகத்தில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இம்முறை அரசாங்கத்தின் பௌத்த கொள்கையின் யாதார்த்தம் என்ற தொனிப் பொருளில் கருத்துக்கள் தெரிவிக்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இந்த விடயம் தொடர்பிலான புத்திஜீவிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் சமகால மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தும் பொதுமக்கள் அரச சபை என்ற நிகழ்வு மாதத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெறுகின்றது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளின் பங்களிப்புடன் இது இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கத் தரப்பு மற்றும் விடயம் தொடர்பிலான புத்திஜீவிகளினது கருத்துக்கள் கலந்தாலோசிக்கப்படும் இந்த நிகழ்வில் பொதுமக்கள் பங்குகொள்கின்றமை மற்றுமொரு அம்சமாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11