இலங்கையின் அபிவிருத்திக்கு 88 கோடி டொலர்களை வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது

Share Button

அமெரிக்காவின் புத்தாயிரமாம் சவாலுக்கான கூட்டுத்தாபனம் இலங்கைக்கு 88 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புத்தாயிரமாம் சவாலுக்கான கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புரோக் பியமன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நன்கொடையை இலங்கைக்கு வழங்குவதற்கான சட்டமூலமும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இது அமெரிக்காவின் செனட் சபையில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. செனட் சபையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இது தொடர்பான ஒப்பந்தத்தை கொழும்பில் கைச்சாத்திடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *