நாட்டின் பல பாகங்களில் கடும் மழை – களுத்துறை மாவட்டத்தில் 300 மில்லி மீற்றர் வரையான கடும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது

Share Button

நாட்டின் பல பிரதேசங்களில் நேற்றிரவு கடும் மழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிற்கு அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக எதிர்வரும் 16 மணி நேரத்திற்கு நாட்டின் அநேகமான பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும். சில இடங்களில் 300 மில்லி மீற்றரைத் தாண்டிய கடும் மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன்கூடிய மழையின்பொழுது காற்றின் வேகம் 80 கிலோ மீற்றருக்கு அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும். இன்று அதிகாலை 2.30 அளவில் அகலவத்தவிற்கு 286 தசம் 5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. களுத்துறை மாவட்டத்தின் கெசல்ஹேனாவா பிரதேசத்தில் 245 தசம் 5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் ஹொரணயில் 225 தசம் 5 மில்லி மீற்றர் மழை வீழச்;சியும் பதிவாகியுள்ளன. ஹம்பாந்தோட்டையின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட கடுங்காற்றின் காரணமாக வீடுகள், வர்த்தக நிலையங்கள் பல பாதிக்கப்பட்டன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *