சில மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்

Share Button

நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம். ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கும் சாத்தியம் உள்ளது. இந்தப் பிரதேசங்களில் மழையுடன் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். இது தொடர்பில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காலியிலிருந்த ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையும், காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற் பிரதேசத்தில் இடியுடன் மழை பெய்யும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றராக இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *