வன்டேஜ் கழக தலைவர் வெற்றிக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் வெற்றியீட்டியுள்ளது.

Share Button

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் ஏற்பாடு செய்த வன்டேஜ் கால்பந்தாட்டக் கழக சுற்றுத்தொடரில் கொழும்பு கால்பந்தாட்டக் கழக அணி வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்தது. இந்தச் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி நேற்று சுகததாக மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கொழும்பு கால்பந்தாட்டக் கழக அணியைச் சேர்ந்த வீரர்கள், ப்ளு ஈகிள் அணியை 4ற்கு பூச்சியம் என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்கள். சுற்றுத்தொடரில் திறமையான வீரர் என்ற வெற்றிக் கிண்ணத்தை கொழும்பு கால்பந்தாட்டக் கழக அணியைச் சேர்ந்த மொஹம்மட் பஷால் வென்றார். இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தையும் கேடயங்களையும் வழங்கினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *