இந்தியாவின் ஆதார் அட்டை திட்டம் அரசியல் அமைப்பிற்கு ஏற்புடையது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Share Button

ஆதார் அட்டைத் திட்டம் அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது என இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் திட்டம் அந்தரங்கம் தொடர்பான உரிமைகளை மீறவில்லையென உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று அறிவித்துள்ளார்கள். சர்ச்சைக்குரிய ஆதார் திட்டம் பற்றிய வழக்கு விசாரணையின் தீர்ப்பை அவர்கள் வாசித்தார்கள். எனினும், ஆதார் அட்டையை வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கோ தொலைபேசி இணைப்புக்களைப் பெறுவதற்கோ பாடசாலைகளில் பிள்ளைகளை அனுமதிப்பதற்கோ கட்டாயமாக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது.

ஆதார் என்பது இந்தியர்களுக்கான தனித்துவ அடையாள அட்டை முறையாகும். இதன் கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் தனித்தனி இலக்கங்கள் வழங்கப்படும். ஆதார் அட்டையில் விரல் அடையாளம், கண்வில்லை அடையாளம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும்.

இதனை நலன்புரி, தீர்வைக் கொடுப்பனவுகள், சமூக சேவைகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11