கிரேக்கத்தில் குடியேறிகள் தங்கியிருந்த மிகப்பெரிய முகாம் தீக்கிரையானதை அடுத்து, சுமார் 13 ஆயிரம் பேர் நிர்க்கதி

Share Button

கிரேக்கத்தில் குடியேறிகள் தங்கியிருந்த மிகப்பெரிய முகாம் தீக்கிரையானதை அடுத்து, சுமார் 13 ஆயிரம் பேர் நிர்க்கதியாகியுள்ளனர். இந்த முகாம் லெஸ்போஸ் தீவில் அமைந்துள்ளது. இதில் மூவாயிரம் பேரை மாத்திரம் தங்க வைக்கக்கூடிய வசதிகள் இருந்தன. ஆனால், இங்கு 13 ஆயிரம் பேர் வரை இருந்ததாகத் தெரிகிறது. நேற்று இந்த முகாம் தீப்பிடித்ததை அடுத்து, பல குடியேற்றவாசிகள் காயமடைந்திருக்கிறார்கள். அத்துடன் சுவாசக் கோளாறுகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். புகலிடக் கோரிக்கையாளர்களால் தீ பரவியதாக கிரேக்க அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *