கொலம்பியாவில் இடம்பெற்ற கலவரத்தில் 7 பேர் உயிரிழப்பு

Share Button

கொலம்பியாவில் இடம்பெற்ற கலவரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கொலம்பியாவின் பொஹோட்டோ நகரில் நபரொருவர் கொவிட்-19 தொற்று தொடர்பான சமூக இடைவெளியைப் போணாத குற்றச்சாட்டின் பேரில் பொலிசாரால் உடலை மரத்துப் போகச் செய்யும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அவர் மீது பல தடவைகள் குறித்த வகை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால் அவர் உயிரிழந்தார். அதற்கெதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கொலம்பியாவில் கொவிட்-19 வைரசிற்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 22 ஆயிரத்து 275 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 7 இலட்சம் பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *