நல்லிணக்க அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்கள் 22 பேரை விடுதலை செய்துள்ளதாக தலிபான்கள் தெரிவிப்பு.

Share Button

நல்லிணக்க அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்கள் 22 பேரை விடுதலை செய்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிடிபட்ட வீரர்களை இவ்வாறு விடுவித்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பல மாதகால தாமதத்திற்குப் பின்னர், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும், தாலிபான் இயக்கத்திற்கும் இடையிலான முதலாவது சமாதான பேச்சுவார்த்தை நேற்று ஆரம்பமானது. இந்தப் பேச்சுவார்த்தை கட்டாரில் இடம்பெறுகிறது. பேச்சுவார்த்தையின் முதல் அமர்வில்; அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ பங்கேற்றார். கடந்த பெப்ரவரியில் அமெரிக்க – தாலிபான் பாதுகாப்பு உடன்படிக்கைக்குப் பின்னர் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருக்க வேண்டும். எனினும், கைதிகள் பரிமாற்றம் தொடர்பான கருத்து முரண்பாடுகள், ஆப்கானில் நீடித்த வன்முறைகள் காரணமாக பேச்சுவார்த்தை தாமதமானது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *