ஸ்பெயின் முடிக்குரிய வாரிசான இளவரசி லியோனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரண்மனை அறிவிப்பு.

Share Button

ஸ்பெயின் முடிக்குரிய வாரிசான இளவரசி லியோனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரண்மனை அறிவித்துள்ளது. லியோனர் கல்வி கற்கும் வகுப்பில் சக மாணவர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இனங்காணப்பட்டதை அடுத்தே இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்த போதிலும், தொற்று உறுதி செய்யப்படவில்லை என அரண்மனை அறிவித்துள்ளது. இவரது பெற்றோர்களான மன்னர் பிலிப்பேயும், மகாராணி லெதிசியாவும் தமது பணிகளை வழமை போன்று முன்னெடுப்பதாகத் தெரிய வருகிறது. ஸ்பெயினில் கொவிட்-19 தொற்று காரணமாக 29 ஆயிரத்து 747 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *