புத்தளம் – வனாத்தவில்லு பிரதேசத்தில் சுற்றாடலுக்கு ஏற்பட்ட சேதத்தைத் துறைசார் அமைச்சர் நேரில் பார்வையிட்டுள்ளார்

Share Button

புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பிரதேசத்தில் சுற்றாடலில் ஏற்படுத்தப்பட்ட அழிவைத் துறைசார் அமைச்சர் நேரில் பார்வையிட்டுள்ளார்.

 

அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க நேற்றைய தினம் அப்பகுதிக்கு விஜயம் செய்து சுற்றாடல் மாசுபடுத்தப்பட்ட காணிகளை ஒரு மாதத்திற்குள் மீளவும் பசுமைத் தொகுதியாக மாற்றுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த அழிவுக்கு காரணமானது எனக் கூறப்படும் சீமெந்து நிறுவனத்திற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

வனாத்தவில்லு சதுப்பு நில விவகாரம் பற்றி சமீபத்தில் பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. குறித்த சீமெந்து நிறுவனத்திற்கு காணிகளை குத்தகைக்கு விட்டதன் மூலம் விளைந்த பாதிப்புக்களைச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க உறுதியளித்திருந்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *