எம்.ரி. நியு டயமன் கப்பலில் ஏற்பட்ட தீ பற்றிய சேதங்களை மதிப்பிட்டு தீயை அணைப்பதற்கான செலவினத்தைக் கோர நடவடிக்கை எடுக்கப்படும்

Share Button

கிழக்குக் கடற்பரப்பில் விபத்திற்கு உள்ளான எம்.ரி. நியு டயமன் கப்பலின் சேத விபரங்களை மதிப்பிட்ட பின்னர் தீயணைப்பிற்கான செலவினங்களை நிர்ணயிக்கப் போவதாக சமுத்திரவியல், சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தரப்புக்களிடமிருந்து இழப்பீட்டைக் கோரப்போவதாக அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி தர்ஷணி லஹந்தபுர தெரிவித்தார். நேற்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் இது பற்றிய பேச்சுவார்த்தை நடந்ததாக அவர் கூறினார்.

 

கப்பலின் தீயை அணைப்பதற்கு ஏற்பட்ட செலவினங்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு அறவிடுவதென விரிவாக ஆராயப்பட்டது. இந்தக் கப்பல் தற்போது மட்டக்களப்பிலிருந்து சுமார் 60 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *