உலகெங்கிலும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை எட்டுகிறது

Share Button

உலகெங்கிலும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை எட்டுகிறது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் பிரகாரம், இரண்டு கோடி 91 இலட்சத்து 36 ஆயிரத்து 553 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்து 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பல நாடுகளில் மீண்டும் கொவிட்-19 வேகமாகப் பரவியுள்ள நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜோர்தானில் பாடசாலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வணக்கஸ்தலங்கள், பொதுச் சந்தைகள் போன்றவை மூடப்படுகின்றன. வேல்ஸில் மீண்டும் முடக்க நிலை அறிவிக்கப்படும் சாத்தியம் உள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *