மெய்வல்லுனர் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பத்து வீரர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை

Share Button

நாட்டின் சிறந்த பத்து மெய்வல்லுனர் போட்டியாளர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள 46ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் வீர, வீராங்கனைகளுக்கு இதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. திறமையான பத்து வீர – வீராங்கனைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்குடன் போட்டிகளுக்கான செலவினத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு விழாவில் 30 போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன. இறுதிப் போட்டி கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றாலும், நுவரெலியா, கதிர்காமம் ஆகிய இடங்களிலும் தெரிவு செய்யப்பட்ட போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *