இரண்டு அரபு நாடுகள் இஸ்ரேலுடன் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கத் தயார்

Share Button

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹூ வொஷிங்டன் சென்றடைந்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரெயின் ஆகிய நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது இதன் நோக்கமாகும். இதன் மூலம் இரண்டு அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா பின் சாஹிட் அல் நஹியான் தலைமையிலான குழுவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *