உலகின் பிரதான கடல் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றத் திட்டம்

Share Button

பூகோள அமைவை சரியாக பயன்படுத்தி இலங்கையை உலகின் பிரதான கடல் கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

உலகில் மிதக்கும் துறைமுகத்தை மாதிரியாக கொண்டு நாட்டின் துறைமுக வசதிகளை அபிவிருத்தி செய்ய முடியும்என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறான எதிர்பார்க்கும் இலக்கை அடைய விரைவாக முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

இறங்குதுறைகள் அபிவிருத்தி செய்யப்படும். அத்துடன் துறைமுகங்களை அபிவிருத்தி செய்து உலகின் பாரிய கப்பல்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

படகு மற்றும் கப்பல் தொழில்துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சின் எதிர்கால செயற்றிட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *