20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

Share Button

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட குறித்த குழுவின் அறிக்கை நாளைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், அண்மையில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

 

குறித்த குழுவில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 9 பேர் உள்ளடங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *