தேசிய உணர்வுகளையும், மரபுரிமைகளையும் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பொன்றை வகுக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்கிறார் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா.

Share Button

தற்போதுள்ள அரசியலமைப்பின் மூலம் மக்களின் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் பிரதிபலிப்பதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அரசியலமைப்புக்களின் விடயங்களை உள்ளடக்கிய இந்த அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தற்போதைய அரசியலமைப்பில் தீர்வு இல்லை என அவர் குறிப்பிட்டார். தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்றதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையின் தூதுவர்கள் மன்றம் ஏற்பாடு செய்த ‘இலங்கைக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பு’ என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்ற மாநாட்டில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். இந்நிகழ்வு நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது. உள்நாட்டுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் தற்போதைய அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. உள்நாட்டுத் தொழில் முயற்சியாளர்களையும் கைத்தொழில்களையும் பாதுகாக்கும் தேசிய கொள்கை காணப்பட வேண்டும். அதனால், நாட்டின் தேசிய உணர்வைப் பிரதிபலிக்கும் தேசிய மரபுரிமைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

 

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் நாடு முழுவதிலும் ஒரு கருத்தாடல் உருவாகியிருப்பதாக சங்கைக்குரிய மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டின் அதிகாரம் சீர்குலைக்கப்பட்டுள்ளது. அதனால் புதிய அரசியலமைப்பு விரைவில் கொண்டுவரப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

 

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு முன்னர் தற்போதுள்ள அரசியலமைப்பின் பயங்கரமான தடங்கல்களை நீக்க வேண்டியதன் தேவை காணப்படுவதாக பேராசிரியர் ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார். ஒருமைப்பாடு, நீர்ப்பாசன விவசாய பொருளாதார முறை, சம்பிரதாய ஒழுக்க நியமங்கள் என்பவற்றை இனங்கண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *