ஒரு இலட்சம் கிலோ மீற்றர் கிராமியப் பாதைகளை அமைக்கும் பணிகள் 2024ம் ஆண்டில் பூர்த்தி.

Share Button

ஒரு இலட்சம் கிலோ மீற்றர் தூரமான கிராமியப் பாதைகளை அமைக்கும் பணிகள் 2024ம் ஆண்டில் நிறைவு பெறும். லேசான முறையில் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்துப் பிரஜைகளினதும் உரிமையாகும். சிறிய பாலங்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில மாதங்களில் எட்டாயிரம் கிலோ மீற்றர் தூரமான பாதையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படடுள்ளன. இவற்றில் 400 கிலோ மீற்றர் நீளமான பாதைகளின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கிராமியப் பாதைகள் மற்றும் சிறிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான இராஜாங்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

 

பாதையை அமைப்பதற்கான மண், கல் போன்ற தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிரதான பாதையின் இரு மருங்கிலும் பல்வேறு வகையான இரண்டு மில்லியன் மரக் கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்மாணப் பணிகளின் போது உப ஒப்பந்தக்காரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். அனைத்துப் பிரதான பாதைகளினதும் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை முற்றாக நிறுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பிற்கு பணிப்புரை வழங்கினார். மாடி வீடுகள், வர்த்தக மத்திய நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை அமைக்கும் போது வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளைச் செய்வது கட்டாயம் என அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *