20 ஆவது அரசியலமைப்புத் திருத்த நகல் சட்டமூலம் தொடர்பாகக் கண்டறியும் குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில்.

Share Button

20 ஆவது அரசியலமைப்புத் திருத்த நகல் சட்டமூலம் தொடர்பான விடயங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தக் குழு பரிந்துரைகளை முன்வைத்திருக்கும் என தான் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார். அனைவரினதும் இணக்கப்பாட்டிற்கு அமைய, மிகவும் ஜனநாயக ரீதியான திட்டங்களை முன்வைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தேசிய வானொலிக்கு தெரிவித்தார்.

மக்களின் அபிலாஷைகளை எடுத்தியம்பும் அரசியல் அமைப்பொன்று நாட்டிற்கு அவசியம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வலியுறுத்தினார்.

இதேவேளை, இன்று காலை 7.00 மணி முதல் சிங்கள தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் ‘சுபாரதி’ நிகழ்ச்சியில் 20வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடப்படும். இதில் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கலந்து கொள்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *