தனியார் வகுப்புக்களின் அடிப்படையிலான கல்வி முறையில் படைப்பாற்றலுக்கு இடமில்லையென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிப்பு.

Share Button

தனியார் வகுப்புக்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையில் படைப்பாற்றலுக்கு எதுவித இடமும் கிடையாது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த முறைமையில் மாணவர்கள் அடிமைகளாக கல்;வி கற்கிறார்கள். அவர்களுக்கு பல்;கலைக்கழக பிரவேசம் என்ற இலட்சியத்தைத் தவிர்த்து வேறெந்த நோக்கமும் கிடையாது. இதனால் புதிய படைப்புக்களை உருவாக்கும் வாய்ப்பு பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லை என அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பு றோயல் கல்லூரியின் புத்தாக்க கண்காட்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். இந்தக் கண்காட்சிக்குரிய மூன்றாம் நாள் அங்குரார்ப்பண வைபவம் இன்று இடம்பெற்றது.

அன்று இலங்கைக்குப் பின்னால் இருந்த சிங்கப்பூர், இந்தியா, கொறியா முதலான நாடுகள் இன்று உலகாளுகின்றன. அன்று வகுப்பில் சிறந்த மாணவராகத் திகழ்ந்த இலங்கை இன்று பின்வரிசைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கான தனித்துவ அடையாளத்தை இன்னமும் உறுதி செய்ய முடியாது போயுள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோது, டொலரின் பெறுமதி வலுவடைந்திருப்பதன் மூலம் இலங்கைக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைவது ரூபாவின் பெறுமதியை பலவந்தமாக வலுப்படுத்துவது அல்ல. இது ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நாடவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *