தூரச் சேவை பஸ் வண்டிகளில் இணையத்தின் மூலம் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் வசதி.

Share Button

தூர இடங்களுக்கான தனியார் பஸ் சேவைகளில் இணையத்தின் வாயிலாக ஆசனங்களை ஒதுக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான இணையத் தளம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இத்ன முகவரி றறற னழவ வெஉ-டிழழமiபெ னழவ டம என்பதாகும். அங்குரார்ப்பண வைபவத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இணையத்தின் ஊடாக ஆசனங்களை ஒதுக்கும்போது, பஸ் ரிக்கட்டுக்கான கட்டணத்திற்கு அப்பால் 30 ரூபாவை செலுத்துவது போதுமானது. முதற்கட்டத்தின் கீழ் கொழும்பில் இருந்து கதிர்காமம், யாழ்ப்பாணம், பதுளை, அம்பாறை, தெனியாய, பசற, லுணுகல, அக்குரஸ்ஸ, திருக்கோயில், மட்டக்களப்பு, பருத்தித்துறை, மடுல்சீம, அனுராதபுரம், திருகோணமலை உள்ளிட்ட 35 மார்க்கங்களில் ஆசனங்களை ஒதுக்க முடியும்.

இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் டிஜிற்றல் அட்டை மூலம் ஆசனங்களை ஒதுக்கி, காசு செலுத்தும் வசதிகளை ஏற்படுத்தப்போவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11