தகவல் அறியும் சட்டம் பல துறைகளிலும் பயனுடையதாகும் என்று சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்

Share Button

இன்று கொண்டாடப்படும் சர்வதேச தகவல் அறியும் தின நிகழ்வு தாமரைத்தடாக அரங்கில் இன்று இடம்பெற்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு இதனை ஒழுங்கு செய்திருந்தது. மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவது அரசியல் ரீதியாக பாதகமாக அமைந்திருந்தாலும், மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் கருதி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தகவல் அறியும் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றியமை பாராட்டத்தக்கதாகும் என்று நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நாட்டின் வளங்களை மக்களின் நலனுக்காக வீண் விரையம், ஊழல் இன்றி பயன்படுத்துவதை காண்பது மக்களின் எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வாய்ப்பு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கிடைக்கும்.

கரு ஜயசூரிய எதிர்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தனிநபர் பிரேரணையாக இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வேளையில் முன்னைய ஆட்சியாளர்கள் அதனை அவமானத்திற்குட்படுத்தினார்கள் என அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார். தற்சமயம் முன்னைய ஆட்சியாளர்கள் எதிர்கட்சியில் அமர்ந்து இந்த சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார். இந்த சட்டம் அமுலில் இருக்கும் நிலையிலும் சில ஊடகங்கள் போலிப் பிரசாரங்களை முன்னெடுப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *