மஹிந்த ராஜபக்ஷ எரிபொருள் சூத்திரம் குறித்து பேசுவது நகைப்புகுரிய விடயமாகும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிப்பு

Share Button

லக சந்தையில் ஒரு பிப்பாய் மசகு எண்ணெயின் விலை குறைந்திருந்த சந்தர்ப்பத்தில் எரிபொருளின் விலையை குறைக்குமாறு வழங்கிய நீதிமன்ற தீர்ப்பை கருத்திற் கொள்ளாத மஹிந்த ராஜபக்ஷ இன்று எரிபொருள் சூத்திரம் குறித்து பேசுவது நகைப்புகுரிய விடயமாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 

விலை சூத்திரத்திற்கு அமைய பாவனையாளர்களுக்கு மிகக் குறைந்த பாதிப்பு ஏற்படும் வகையில் விலையை தீர்மானிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமது ஆட்சிக்காலத்தில் நடந்து கொண்ட விதம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மறந்து விட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை தொகுதி கூட்டத்தில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

 

இந்தோனோஷியாவில் ஏற்பட்ட தாக்கம் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *