பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களின் புலமைப்பரிசில் கொடுப்பனவை நிறுத்த நடவடிக்கை

Share Button

மாணவர்களை கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தும் மற்றும் ஒழக்கவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் நிதியை நிறுத்தும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு லலித் அத்துலத் முதலி மகாபொல புலமைப்பரிசில் நிதியம் தீர்மானித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் பணிப்பாளர் பராக்கிரம பண்டார தெரிவித்தார்.

மகாபொல புலமைப்பரிசில் கண்காட்சியை இந்த வருடத்தில் நடத்துவதற்கும், புலமைப் பரிசில் கொடுப்பனவை துரிதப்படுத்துவதற்கும் அங்கு தீர்மானிக்கப்பட்டது. இதுவரை இரண்டு பிரிவாக செலுத்தப்பட்ட புலமைப்பரிசில் கொடுப்பவை ஒரே தடவையில் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் கீழ் மாணவர்களின் கணக்கில் வைப்புச் செய்யும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும். இந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் மாணவர்களுக்கு விரைவில் புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கப்படும் என்று திரு பராக்கிரம பண்டார தெரிவித்தார்.

தற்போதுள்ள சட்டத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போது சட்டவரைவு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இந்தத் திருத்தம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11