அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு மற்றுமொரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Share Button

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய 20 லட்சம் ரூபா அரச நிதியை மோசடி செய்திருக்கின்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்திருக்கிறது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான மூன்று லட்சத்து 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதோடு, அதில் 20 லட்சம் ரூபாவை தமது நிறுவனத்திற்காக ஒதுக்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் பாடநெறியை நடத்திய அமெரிக்க நிறுவனத்திற்கும், சந்தேகநபருக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி விசாரணைகள் நடத்தப்படும் என்று குஊஐனு அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.

இந்த சம்பவம் பற்றி சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு நீதவான் லங்கா ஜயரட்ன இன்று பிடியாணை பிறப்பித்தார். சிகிச்சைப் பெறுவதற்காக பிணையில் விடுவிக்கப்பட்ட ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்கா சென்றிருந்தாலும், சிகிச்சையின் பின்னர் இதுவரை இலங்கை திரும்பவில்லை என்பது குறிப்;பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11