பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதென பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்திருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றதென பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அவர் கருத்து வெளியிட்டார்.
நாட்டின் தெளிவான பொருளாதாரக் கொள்கை இல்லாமை நாட்டின் எதிர்கால பயணத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய தடையாகும். தற்சமயம் நிலவும் உலகப் பொருளாதார நெருக்கடியினால் பெரும்பாலான நாடுகளில் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையிலிருந்து மீள்வதற்கென நாட்டின் ஏற்றுமதியை வலுப்படுத்துவதற்கான தெளிவான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி கூறினார்.