திருட்டுக்களையும், ஊழலையும், வீண் விரையத்தையும் இல்லாதொழிப்பது சகலரதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி வலியுறுத்தல்.

Share Button

ஓற்றுமையான சமூகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளில் தேசிய மத்தியஸ்த சபையின் உத்தியோகத்தர்கள் ஆற்றும் சேவைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டிப் பேசியுள்ளார்.

இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற 28 ஆவது தேசிய மத்தியஸ்த தின நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.

ஒற்றுமையும், பொதுத்தன்மையும், தளர்வு காணும் இடங்களில் சச்சரவும், ஒழுக்கவீனமும் தோன்றுகின்றன. சமயக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வது பற்றிய சிந்தனைகளை உருவாக்குவது அவசியமாகும். இதன் அடிப்படையில் பரந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்து நிவாரணம் வழங்கும் முயற்சிகளில் தேசிய நல்லிணக்கசபை ஆற்றும் பணிகள் வரவேற்கத்தக்கவை என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இன்றைய சமூகத்தில் களவு, ஊழல், வீண்விரையம் போன்றவை வேரூன்றியுள்ளன. இவற்றை வேரோடு களைந்தெறிய சகல தரப்புக்களும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *