சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு, பீதுரு-தலாகல மலையுச்சியில் அஞ்சல் பெட்டி
சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு, பீதுரு-தலாகல மலையுச்சியில் அஞ்சல் பெட்டி
இன்று சர்வதேச தபால் தினமாகும்.
1969ஆம் ஆண்டு ரோக்கியோவில் ஒன்றுகூடிய உலக தபால் சங்கம் ஒக்டோபர் 9ஆம் திகதியை சர்வதேச தபால் தினமாக பிரகடனம் செய்தது.
இலங்கையில் 1798ஆம் ஆண்டு தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1857ஆம் ஆண்டு விக்டோறியா மகாராணியாரின் உருவத்துடன்கூடிய முதல் முத்திரை இலங்கையில் வெளியிடப்பட்டது. இன்று நாடெங்கிலும் 651 தபாலகங்களும்,
3 ஆயிரத்து 411 உபதபாலகங்களும் இயங்குகின்றன.
144 ஆவது சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய வைபவம் கண்டி பொல்கொல்லையில் இடம்பெறும். சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொள்வார். தபால் தினத்தையொட்டியதாக பீதுறுதலாகல மலையுச்சியில் தபாற்பெட்டியொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.