ட்ரம்பின் கொள்கைகளால் அமெரிக்கா பின்நோக்கித் தள்ளப்படுவதாக நொபெல் பரிசுவென்ற பொருளாதார நிபுணர் குற்றச்சாட்டு

Share Button

ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அனுசரிக்கும் கொள்கைகள் காரணமாக அமெரிக்கா பின்நோக்கிப் பயணிக்கின்றதென நொபெல் பரிசுவென்ற பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

என்ன செய்ய வேண்டிய தேவை உள்ளதோ அதில் இருந்து மிகவும் விலகிச்செல்கிறோம் என பேராசிரியர் வில்லியம் நோர்டோஸ் தெரிவித்தார். அவருக்கும் பேராசிரியர் போல் ரோமருக்கும் 2018ஆம் ஆண்டிற்குரிய நொபெல் பொருளாதாரப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் புதுமையையும், சுவாத்திய மாற்றக் கொள்கைகளையும் எவ்வாறு இணைத்துக் கொள்ள முடியும் என்பதை உலகறியச் செய்யக்கூடிய பசுமை வளர்ச்சி மாதிரிகளை இருவரும் உருவாக்கியிருந்தார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *