தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப சாதகமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது

Share Button

மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை சிவில் சமூகத்தின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியமைக்கான சான்றாகும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன தெரிவித்துள்ளார். இது நாட்டின் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் நிலையான சமாதானத்திற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சர்வதேச சமூகம் பாராட்டியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அழுத்தங்களை இல்லாதொழிக்க அரசாங்கத்தால் முடிந்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இழப்பீடுகளை வழங்குவதற்கான தேசிய கொள்கைகள் அவசியம் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி தெரிவித்தார். மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் போது, சகலரும் ஒரே நாட்டுப் பிரஜைகள் எனக் கருதி இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் தென் பகுதியில் இடம்பெற்ற இரண்டு கிளர்ச்சிகளின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அலுவலகத்தின் ஊடாக நன்மைகள் கிடைக்கும் எனவும் ஜகத் லியனாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, இழப்பீடுகளுக்கான அலுவலகச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *