தேசிய வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு இன்றுடன் 54 வருடங்கள் பூர்த்தி

Share Button

திணைக்களமாக இயங்கிய தேசிய வானொலி கூட்டுத்தாபனமாக ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 54 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

திணைக்களமாக இயங்குவதில் எழுந்த சிரமங்களை நீக்கி, சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்துடன் 1967ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க கூட்டுத்தாபனத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
1972 ஆம் ஆண்டில் குடியரசு யாப்பு அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கூட்டுத்தாபனத்தின் பெயரில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

1925ஆம் ஆண்டு பிரிட்டன் ஆளுனராகக் கடமையாற்றிய கியூ க்ளிபெர்ட் அந்த வருடத்தில் டிசெம்பர் 16ஆம் திகதி இலங்கையில் தேசிய வானொலிச் சேவையை ஆரம்பித்து வைத்தார். அது 1949ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி வரை தபால் திணைக்களத்தில் இயங்கியது. 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி ரேடியோ சிலோன் என்ற பெயரில் அரச திணைக்களமாக மாற்றப்பட்டது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 54 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதான அலுவலக வளாகத்தில் இன்று முழு இரவு பிரித் பாராயணம் இடம்பெறும். இலங்கை வானொலியின் 95 ஆவது ஆண்டு நிறைவையும், இது கூட்டுத்தாபனமாக ஸ்தாபிக்கப்பட்ட 54 ஆவது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு பிக்குமாருக்கு தானம் வழங்கப்படும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *