ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டாரவும், உப தலைவராக அகிலவிராஜ் காரியவசமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதன் கூட்டம் ஒன்று சிறிகொத்த தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.