அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அவசரகால நிலையொன்றைப் பிரகடனப்படுத்த ஜனாதிபதி ட்ரம்ப் அங்கீகாரம்.

Share Button

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அவசரகால நிலையொன்றைப் பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதனை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்கும் நிகழ்வின் போது வன்முறைகள் இடம்பெறுவதற்கான அச்சுறுத்தல் உள்ளது என அமெரிக்காவின் புலனாய்வுப்பிரிவு எச்சரித்த நிலையிலேயே, வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதை மேற்கோள் காட்டி வன்முறைகள் இடம்பெறுவதற்கான அபாயம் உள்ளதாக அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *