கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ, குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என ஜனாதிபதி உறுதி.

Share Button

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

 

துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

 

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு விற்க கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் செய்திருந்தது. எனினும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் கலந்துரையாடியது. அதன் பயனாக முனையத்தின் 51மூ உரிமையையும் கட்டுப்பாட்டையும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் தக்க வைத்துக் கொள்ள இணக்கம் காணப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

நாட்டில் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையின் இறைமை அல்லது சுதந்திரத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

ஹம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த அரசாங்கத்தினால்; சீன அரசாங்கத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், தான் அதிகாரத்திற்கு வந்த பின்னர், சீனாவுடன் கலந்தாலோசித்து துறைமுக கடல் பிரதேசத்தின் பாதுகாப்பிற்கான பொறுப்பை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *