நாட்டில் கொவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 229.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 229 ஆக அதிகரித்திருக்கின்றது. நேற்று 692 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் 655 பேர் பேலியகொட கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்களாவர். தொற்றில் இருந்து குணமடைந்த 646 பேர் நேற்று வீடு திரும்பியிருக்கின்றார்கள். இதன்படி, குணமடைந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 267 ஆக அதிகரித்திருக்கின்றது. இதேவேளை, 3 கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியிருக்கின்றன. பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடை ஆண் ஒருவரும், கொழும்பு-15ஐச் சேர்ந்த 81 வயதுடைய மற்றுமொரு ஆணும், கொழும்பு-10ஐச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்திருக்கின்றார்கள்.
இதன்பிரகாரம் கொவிட் தொற்றுக் காரணமாக மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 247ஆக அதிகரித்திருக்கின்றது.