அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் ரஷாக்கிற்கும் இடையில் சந்திப்பு.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஓமர் அப்துல் ரஷாக்;;கிற்கும் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பு மாளிகாவத்தையில் உள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது. மீன்பிடி நடவடிக்கைகளின் போது இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி இதன்போது ஆராயப்பட்டது. இந்துசமுத்திர கடற்பிராந்தியத்தில் வெளிநாட்டு மீன்பிடிபடகுகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் இந்து சமுத்திர நாடுகளுக்கு இடையிலான பொதுவான கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டிருக்கிறது. கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி செயற்பாடுகளில் இரு நாடுகளுக்குமிடையில்; தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றியும் இதன் போது ஆராயப்பட்டது.