சினிமாத்துறைக்கு மீண்டும் வரிச்சலுகை

Share Button

சினிமா துறைக்கு மீண்டும் வரிச்சலுகை கிடைத்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது சினிமாத் துறைக்கு வழங்கிய சலுகையை கடந்த அரசாங்கம் நீக்கியிருந்தது. அந்த சலுகையை மீண்டும் வழங்க பிரதமர் தீர்மானித்துள்ளார். இந்த வரிச்சலுகை கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது. சினிமாத்துறையில் ஈடுபடுபவர்கள் பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

திரைப்பட தயாரிப்புக்கும் கண்காட்சிக்கும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது தீர்வை வரி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. திரைப்படத்தை தயாரிக்கும் போது செலவாகும் பணத்திற்கு வரிச்சலுகையையும் திரைப்படத்தை காண்பிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்திற்கு வரிச்சலுகையையும் வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திரைப்பட கூட்டுத்தாபனத்தின் அனுமதியின் கீழ் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

திரைப்பட கூட்டுத்தாபனத்தின் ஊடாக விண்ணப்பிப்பதன் மூலம் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *