ஆங்கில மொழியாற்றலை மேம்படுத்தும் அரசின் திட்டத்தின் கீழ் மலையக பிராந்திய ஒலிபரப்பு நிலையத்தின் ஊடாக விசேட நிகழ்ச்சி
நேயர்களின் ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மலையக பிராந்திய சேவையின் ஊடாக ஒரு மணித்தியாலய விசேட நிகழ்ச்சி ஒலிபரப்பாகவுள்ளது.
இந்நிகழ்ச்சி இன்று தொடக்கம் ‘கண்டி கிளசிக் எவ்.எம்’ என்ற பெயரில் முற்பகல் 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை ஒலிபரப்பாக இருக்கிறது. இது பாடசாலை மாணவர்கள் அடங்கலாக ஆங்கிலத்தைக் கற்க விரும்பும் சகல நேயர்களுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்குமென கூட்டுத்தாபனத்தின் தலைவரான விஷாரத ஜகத் விக்ரமசிங்ஹ தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்நிகழ்ச்சில் ஏனைய பிராந்திய ஒலிபரப்புச் சேவைகளுக்கும் விஸ்தரிக்கப்படுமென அவர் கூறினார்.
கண்டி கிளசிக் எவ்.எம் நிகழ்ச்சித் தொடரின் ஆரம்ப வைபவத்தில் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் கலந்து கொள்வார். இதனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ செயலிகள் வாயிலாகவும் செவிமடுக்கக்கூடியதாக இருக்கும்.