மோசடிகளுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் விமர்சிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிமையும் கிடையாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

தமது நிர்வாகக் காலத்தில் ஊழல் மோசடி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது, அது தொடர்பில் விமர்சிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்த விதத்திலும் தகுதி இல்லை என தேசிய பொதுமக்கள் சபையின் இணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ராஜபக்ஷ நிர்வாகக் காலத்தில் ஊழல் மோசடிகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்காகவேனும் சுதந்திரம் இல்லை. அந்தக் காலப்பகுதியில் உண்மையை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு தமது உயிரை பணயம் வைக்க வேண்டிய நிலைமை காணப்பட்டதாகவும் சமீர பெரேரா தெளிவுபடுத்தினார்.

ஆளும் அரசாங்கத்தின் கீழ் கிடைக்கப் பெற்றுள்ள ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரம் என்பனவற்றை தவறாக பயன்படுத்தி ஜனநாயக விரோத அரசியல் செயல்பாடுகளில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் உண்மையை மறைப்பதற்கு முயற்சி மேற்கொள்வதாக சமீர பெரேரா தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *