73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சமயக் கிரியைகள் இன்று ஆரம்பம்
73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சமயக் கிரியைகள் இன்று ஆரம்பம்.
73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமயக் கிரியைகள் இன்று ஆரம்பமாகின்றன. இன்று கொழும்பு சுதந்திர சதுக்க மண்டபத்தில் முழு இரவு நேர பிரித் பாராயணம் இடம்பெறும். நாளை கொழும்பு, மருதானை வித்தியால பிரிவேனா விகாரையில் பிக்குமாருக்கு தானம் வழங்கப்படவுள்ளது. நாரஹென்பிற்றி அபயராம விகாரையில் பௌத்த மத சமய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளும் பம்பலப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆ பிராத்தனைகளும் இடம்பெறவுள்ளன. பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் கத்தோலிக்க ஆராதனையும், வெள்ளவத்தை மெதடிஸ்ற் தேவாலயத்தில் கிறிஸ்தவ ஆராதனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
73 ஆவது சுதந்திர தின விழா கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நாளை மறுதினம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்வார்கள்.