கண்டல் தாவரங்களை நடும் வேலைத்திட்டம் இன்று ஆரம்ப

Share Button

ரம்சார் சதுப்பு நிலமாக பட்டியல் இடப்பட்டுள்ள ஆனைவிழுந்தான் பறவைகள் சரணாலயத்தில் கண்டல் தாவரங்களை நடும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகிறது. இறால் பண்ணைகளை அமைப்பதற்காக இங்கு தாவரங்கள் அழிக்கப்பட்டன. இத்தகைய இடங்களில் கண்டல் தாவரங்களை நடும் திடடத்தை வனஜீவராசிகள் திணைக்களமும், மத்திய சுற்றாடல் அதிகார சபையும் கூட்;டாக அமுலாக்குகின்றன. இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர்கள் சி.பி.ரத்நாயக்க, மஹிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் கலந்துகொள்வார்கள். இன்று அனுஷ்டிக்கப்படும் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *