காணி உறுதி இல்லாதவர்களுக்கு துரிதமாக அவற்றை வழக்கத் தேவையான நடவடிக்கை
இந்த ஆண்டில் ஒரு லட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஏ.கே ரணவக்க தெரிவித்துள்ளார். 17 ஆயிரம் பேருக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி அங்கீகாரம் அளித்திருக்கிறார். இவற்றை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இதுவரை நான்கு லட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.