பாகிஸ்தானின் ஸெய்னப் படுகொலை குற்றவாளிக்கு பெற்றோர் முன்;னிலையில் தூக்குத் தண்டனை.

Share Button

பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸெய்னப் என்ற சிறுமியின் படுகொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட நபருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளியான இம்ரான் அலி தூக்கிலிடப்பட்ட சமயம் சிறுமி ஸெய்னப்பின் பெற்றோரும் உடனிருந்ததாக பாகிஸ்தானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் ஆறு வயதுடைய ஸெய்னப் அன்சாரியின் சடலம் லாகூரில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படகொலை செய்தமை தொடர்பில் இம்ரான் அலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர் மேலும் பல சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தமை நீதிமன்றத்தில் ஊர்ஜிதமானது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *