ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது வருடாந்த மாநாடு கொழும்பில்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது வருடாந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அனுமதியினை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாக சபை வழங்கியிருக்கிறது. இந்த மாநாடு 2022ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. மாநாட்டுக்கு சமாந்தரமாக மற்றும் பல கூட்டங்களும், விழாக்களும் நடத்தப்படவுள்ளன. இந்த மாநாட்டில் அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் உள்ளிட்ட நிதித்துறை பிரமுகர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.