கொலைக் குற்றம் பற்றிய செய்திகளுக்கு ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறுப்பு

Share Button

இந்திய புலனாய்வுத் துறைசார்ந்தோர் தம்மை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் சொல்லவில்லையென அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய புலனாய்வு சேவை பற்றி குறிப்பிடப்பட்டதாக உள்நாட்டு, சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த செய்திக்கு ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் முயற்சி பற்றி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டது. இது பற்றி பரந்த விசாரணைகள் அவசியமென ஜனாதிபதி வலியுறுத்தினார். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது பற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டது. அந்த சமயத்தில் தேசிய பொருளாதாரத்தின் நலன் கருதி ஆழமான கடலுடன் கூடிய முனையம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சமகால அரசாங்கம் ஆரம்பம் தொடக்கம் இலங்கை – இந்திய உறவுகளை சிறப்பாக பேணி வந்துள்ளது. ராஜியத் தலைவர்களின் உயர்மட்ட விஜயங்களும் இடம்பெற்றன. இதன் காரணமாக இரு தரப்பு ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது. இன்று இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பில் சகல விடயங்களும் விளக்கிக் கூறப்பட்டன.

இத்தகைய பின்புலத்தில், இரு தரப்பு நல்லுறவுகளையும், இராஜ்ஜிய தலைவர்களுக்கு இடையிலான அரசியல் நட்பையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இத்தகைய மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது வருத்தத்திற்குரியதென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11