சிலர் நல்லாட்சி அரசின் ஒற்றுமையை குலைக்க முனைவதாக அமைச்சர் ராஜித குற்றச்சாட்டு.

Share Button

இரு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க முனைபவர்கள் துரோகிகள் என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஒற்றுமையை பாதுகாக்க திரசங்கற்பம் பூண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார்.

சமகால அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணங்களையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன பட்டியலிட்டார். தேசிய பொருளாதார சபை நேற்றுக் கூடியது. இதன் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன. உலகில் எரிபொருளின் விலை சடுதியாக உயர்ந்தாலும், அதற்கு சரிசமமான விகிதத்தில் உள்ளுரில் எரிபொருள் விலை அதிகரிப்படுவதில்லை. ஹொட்டல் உரிமையாளர்கள் போன்று பொருட்களின் விலை குறையும் சமயம் தமது உற்பத்திகளின் விலைகளை குறைக்காமல், அதிகரிக்கையில் மாத்திரம் விலையேற்றம் செய்கிறார்கள் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மின் கட்டணங்களை அதிகரிப்பதென எதுவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். மின் உற்பத்தி செலவினங்களை குறைக்கும் வழிவகைகளை ஆராய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11