இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி.
இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் மின்விளக்கொளியில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்றது.
சீரற்ற காலநிலை காரணமாக போட்டி 21 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்த இங்கிலாந்து அணி, 19ஆவது ஓவர்pல் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2க்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னணி வகிக்கிறது.